“கலாம் சலாம்” பாடலை மோடியுடன் இணைந்து 5 கோடி மாணவ மாணவிகள் பாடுகின்றனர்


“கலாம் சலாம்” பாடலை மோடியுடன் இணைந்து 5 கோடி மாணவ மாணவிகள் பாடுகின்றனர்
x
தினத்தந்தி 26 July 2017 7:13 AM GMT (Updated: 26 July 2017 7:14 AM GMT)

அப்துல்கலாம் நினைவகத்தை மோடி நாளை திறந்தது வைத்ததும் . நாடு முழுவதும் உள்ள மாணவ - மாணவிகள் “கலாம் சலாம்” பாடலை பாடுவார்கள்.

சென்னை

அப்துல்கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை  ராமேசுவரத்தில் கட்டபட்டு உள்ள அவரது  மணிமண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக அவர் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து மதுரை வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலி காப்டர் மூலம் மண்டபம் சென்று காரில் ராமேசுவரம் பேக்கரும்புக்கு செல்கிறார்.

அப்துல்கலாம் மணி மண்டபத்துக்கு வரும் பிரதமர் மோடி அங்கே அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.

அப்துல்கலாம் மணி மண்டபத்தை பிரதமர் மோடி ரிப்பன் வெட்டி திறக்கும் போது ‘கலாம் பாடல்’ பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “கலாம் சலாம்” என்று பெயர் சூட்டப் பட்டுள்ள இந்த பாடல் மூன்று நிமிடங்கள் பாடக் கூடியதாகும். கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய அந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

சென்னையில் சமீபத்தில் நடந்த விழாவில் “கலாம் சலாம்“ பாடலை பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் வெளியிட்டார். இந்த பாடல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் மாற்றம் செய்து பாடப்பட் டுள்ளது. தெலுங்கு கலாம் சலாம் பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடி உள்ளார்.

அப்துல்கலாம் நினைவகத்தை மோடி திறந்ததும் நாடு முழுவதும் உள்ள மாணவ - மாணவிகள் “கலாம் சலாம்” பாடலை பாடுவார்கள். அனைத்து மாநிலங்களிலும் சுமார் 5 கோடி மாணவர்கள் இந்த பாடலை ஒரே நேரத்தில் பாடுவார்கள். அதாவது நினைவகம் திறக்கப்படும் 11 மணி முதல் 11.03 மணி வரை பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவிகள் தமிழில் “கலாம் சலாம்” பாடலை  பாடுவார்கள். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த வர்கள் தெலுங்கில் பாடுவார்கள். மற்ற மாநில மாணவர்கள் இந்தியில் அந்த பாடலைப் பாடுவார்கள்.

அதன்பிறகு ராமேசுவரம் முதல் டெல்லி வரை செல்ல உள்ள அப்துல்கலாம் 2020 என்ற சாதனை பிரசார வாகனத்தை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

Next Story