7 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை


7 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 May 2024 7:44 AM GMT (Updated: 16 May 2024 7:54 AM GMT)

கோடை மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து பல பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் 7 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இன்றைய மழைப்பொழிவு குறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு:

7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:

* கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 7 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்.

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:

* தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.

15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்:

* ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.


Next Story