டிரம்ப் முடிவால் இந்தியர்களுக்கு பாதிப்பு


டிரம்ப் முடிவால் இந்தியர்களுக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2017 11:30 PM GMT (Updated: 17 Dec 2017 8:50 PM GMT)

அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த கணவன், மனைவி வேலை செய்யும் சலுகை ரத்து ஆகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

வாஷிங்டன்,

ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் 2015–ம் ஆண்டு, ‘எச்–1’ பி விசாவில் அமெரிக்காவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு (ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும்) எச்–4 விசா மூலம் வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினார்.

இதன் காரணமாக ‘எச்–1’ பி விசாவில் அமெரிக்காவில் வேலை பார்க்கிறவர்கள் ஆண்களாக இருந்தால் அவர்களது மனைவிமாருக்கும், பெண்களாக இருந்தால் கணவர்களுக்கும் அங்கேயே வேலை தேடிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. லட்சக்கணக்கானோர், குறிப்பாக இந்தியர்கள் இதில் பலன் அடைந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது.

ஆனால் அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்குத்தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது தற்போதைய ஜனாதிபதி டிரம்பின் கொள்கையாக உள்ளது.

இந்தநிலையில், ‘எச்–1 பி’ விசாவில் அமெரிக்காவில் வேலை செய்கிற வெளிநாட்டினரின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு (எச்–4 விசாதாரர்களுக்கு) அங்கு வேலை பார்ப்பதற்கு வழங்கி வந்த அனுமதியை விலக்கிகொள்வது குறித்து அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு துறை பரிசீலிக்கிறது.

இதற்காக அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி ஒபாமா அரசு கொண்டு வந்த விதிகளை டிரம்ப் அரசு ரத்து செய்ய உள்ளது.


Next Story