பயங்கரவாதத்தை விட ரஷியா, சீனாவே அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாகும் - பெண்டகன்


பயங்கரவாதத்தை விட ரஷியா, சீனாவே அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாகும் - பெண்டகன்
x
தினத்தந்தி 21 Jan 2018 1:52 PM GMT (Updated: 21 Jan 2018 1:52 PM GMT)

பயங்கரவாதத்தை விட ரஷியா, சீனாவே அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாகும் என பெண்டகன் கூறிஉள்ளது. #Pentagon #China #Russia


வாஷிங்டன்,


அமெரிக்காவின் ராணுவ தலைமையகமகான பெண்டகன் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முன்னுரிமை தொடர்பான வியூக ஆவணத்தை வெளியிட்டு உள்ளது. அதில் சீனா மற்றும் ரஷியாவுடன் போட்டியிடுவதற்கு, சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக போட்டியிடுவதற்கு மேலாக மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஒப்பிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற தேர்தலானது சர்வதேச பயங்கரவாதம் தொடர்பாக அமெரிக்கர்கள் மத்தியில் ஆழ்ந்த கவலை இருப்பதை வெளிக்காட்டியது. 

கடந்த இருபது ஆண்டுகளாக உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா தன்னை அதிதீவிரவாமாக ஈடுபடுத்திக் கொண்டு வருகிறது. 

இந்நிலையில் பயங்கரவாதத்தை விட ரஷியா, சீனாவே அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாகும் என பெண்டகன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது அனைவரையும் புருவத்தை உயர்த்த செய்து உள்ளது. 

பெண்டகன் செய்தியாளர் சந்திப்பின் போது பாதுகாப்புத்துறையின் வியூகம் மற்றும் படை மேம்பாட்டு பிரிவின் உதவி செயலாளர் எல்பிரிட்ஜ் கால்பி பேசுகையில் “ அமெரிக்க பாதுகாப்பு துறை ரஷியா மற்றும் சீனாவின் மீது கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது,” என குறிப்பிட்டு உள்ளார். அமெரிக்கா பயங்கரவாத விவகாரத்தில் செலுத்தும் கவனமும் குறையாது, இதுவும் முக்கியமான எச்சரிக்கையாகும் என குறிப்பிட்டு உள்ளார். ரஷியா மற்றும் சீனாவைவிட அமெரிக்க ராணுவம் நவீமானது என்று குறிப்பிட்ட அவர் வியூகம் தொடர்பான விரிவான விளக்கத்தை அளிக்க மறுத்துவிட்டார். 


Next Story