ஐ.பி.எல்; ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு


ஐ.பி.எல்; ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு
x

கோப்புப்படம் 

ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

ஐதராபாத்,

ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் போராடி தோற்றது. அதே போல் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் பணிந்தது.

இந்நிலையில் இரு அணிகளும் வெற்றி கணக்கை தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story