அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம் - சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்


அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம் - சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்
x

Image Courtesy: AFP

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

சென்னை,

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஷிவம் துபே 51 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 207 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது,

பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். குஜராத் போன்ற அணிக்கு எதிராக இது மாதிரியான ஆட்டத்தை நாங்கள் செயல்படுத்த வேண்டி இருந்தது. சேப்பாக்கம் ஆடுகளம் (முதல் 10 ஓவரில் 104 ரன்) எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதபோது நீங்கள் எப்படி பேட்டிங் செய்கிறீர்கள் என்பதை பொருட்படுத்தாமல் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும்.

பவர் பிளேயில் ரச்சின் அற்புதமாக பேட்டிங் செய்து ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு சென்றார். ஷிவம் துபேயின் அதிரடி ஆட்டத்தை பார்த்து டோனி வியந்தார். அவர் சி.எஸ்.கே.வுக்கு வந்ததில் இருந்து அவருடன் டோனி இணைந்துப் பணியாற்றினார். மேலும் அவரது நம்பிக்கை அதிகமாக இருந்தது. எங்களது பீல்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story