மகளிர் டி20 கிரிக்கெட்; மையா பவுச்சியர் அதிரடி - நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து


மகளிர் டி20 கிரிக்கெட்; மையா பவுச்சியர் அதிரடி - நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
x

Image Courtesy: @ICC

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

வெல்லிங்டன்,

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவில் 2-1 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய மையா பவுச்சியர் 91 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி டி20 தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி வரும் 29ம் தேதி நடைபெறுகிறது.


Next Story