சரக்கு ஆட்டோவில் கடத்திய 102 கிலோ கஞ்சா பறிமுதல்

விசாகப்பட்டினத்தில் இருந்து சிக்கமகளூருவுக்கு சரக்கு ஆட்டோவில் கடத்தி வந்த 102 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சரக்கு ஆட்டோவில் கடத்திய 102 கிலோ கஞ்சா பறிமுதல்
Published on

சிக்கமகளூரு: விசாகப்பட்டினத்தில் இருந்து சிக்கமகளூருவுக்கு சரக்கு ஆட்டோவில் கடத்தி வந்த 102 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வாகன சோதனை

விசாகப்பட்டினத்தில் இருந்து சிக்கமகளூருவுக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக சிக்கமகளூரு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரக்ஷித் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்தப்பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

சரக்கு ஆட்டோவில் இருந்த 5 பேரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் சந்தேகமடைந்தனர்.

கஞ்சா கடத்தல்

இதையடுத்து போலீசார், சரக்கு ஆட்டோவில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதில் மூட்டை, மூட்டையாக கஞ்சா இருந்தது. இதுகுறித்து சரக்கு ஆட்டோவில் இருந்த 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் விசாகப்பட்டினத்தை சேர்ந்த இஸ்மாயில் (வயது 26), சிக்கமகளூருவை சேர்ந்த ஆதிக் (32), மற்றொரு இஸ்மாயில் (27), மண்டியாவை சோந்த கவுசிக் மற்றும் ஒரு பெண் ஆகிய 5 பேர் என்பதும், அவர்கள் விசாகசப்பட்டினத்தில் இருந்து சிக்கமகளூருவுக்கு விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர்கள், சிக்கமகளூரு, உடுப்பி, மங்களூரு, சிவமொக்கா ஆகிய பகுதிகளில் உள்ள கஞ்சா வியாபாரிகளுக்கு அதனை விற்க முயன்றதும் தெரியவந்தது.

5 பேர் கைது

இதையடுத்து போலீசார் பெண் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான 102 கிலோ கஞ்சா மற்றும் ஒரு சரக்கு ஆட்டோ ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com