போலி கால்சென்டர் நடத்தி மோசடி செய்த 11 பேர் கைது

தானேயில் போலி கால்சென்டர் நடத்தி மோசடி செய்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலி கால்சென்டர் நடத்தி மோசடி செய்த 11 பேர் கைது
Published on

தானே, 

தானே வாக்ளே எஸ்டேட் பகுதியில் சட்டவிரோத கால் சென்டர் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு போலி கால்சென்டர் நடத்தி அமெரிக்கா நாட்டு பிரஜைகளை மிரட்டி பணம் பறித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கிருந்த ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கம்ப்யூட்டர் உள்பட பல உபகரணங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 25-ந்தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com