அரசியல் செய்திப்பிரிவு
தினத்தந்தி ஊடகக் குழுமத்தின் செய்திகள் அனைத்தும் எங்களின் அனுபவம் வாய்ந்த பிரத்யேக செய்திப் பிரிவுகளால் (Specialized News Desks) தகுந்த உண்மைத்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, துல்லியமான தகவல்களுடன் வெளியிடப்படுகின்றன.
அரசியல் செய்திப்பிரிவு (Political Desk)
குழுவின் பணி: தினசரி தமிழ்நாடு, இந்திய மற்றும் பன்னாட்டு அரசியல் செய்திகளை வழங்குவது, நடுநிலையோடு அரசியல் நகர்வுகளை ஆராய்ந்து கட்டுரைகளைத் தயாரிப்பது, பிரத்யேகப் பேட்டிகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு செய்திகளை எவ்வித பக்கச் சார்புகளும் இன்றி தமிழ் வாசகர்களுக்கு வழங்குவது.
குழுவின் அனுபவம்: பல தசாப்த கால (Decades) கூட்டுப் பத்திரிகையியல் அனுபவம் கொண்ட உதவி ஆசிரியர்கள் மற்றும் அரசியல் நிருபர்களால் வழிநடத்தப்படுகிறது இக்குழு. இதில் உள்ள பெரும்பாலானோர், நீண்ட காலம் களத்தில் நிருபர்களாகப் பணியாற்றி, பல முக்கிய அரசியல் தலைவர்களை நேரடியாகச் சந்தித்து பிரத்யேகப் பேட்டிகள் (Exclusive Interviews) கண்ட அனுபவம் பெற்றவர்கள்.
செய்தி சேகரிப்பு முறை (Methodology): எங்களின் கள நிருபர்கள் மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த தேசிய, பன்னாட்டு செய்தி நிறுவனங்களிடம் இருந்து பிரத்யேகமாக தகவல்கள் பெறப்பட்டு, தகுந்த சரிபார்ப்புகளுக்கு பிறகு செய்திகளாக வெளியிடப்படுகின்றன. மேலும், முக்கிய அரசியல் தலைவர்களின் பிரத்யேகப் பேட்டிகள் (Exclusive Interviews) மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் எங்கள் குழுவினர் தகவல்களைத் திரட்டுகின்றனர்.
நம்பகத்தன்மை கொள்கை (Ethics): எந்தவொரு அரசியல் சார்புமின்றி, செய்திகளைப் பாரபட்சமில்லாமல் நடுநிலையோடு (Objective Reporting) வாசகர்களுக்கு வழங்குவதை இக்குழு உறுதி செய்கிறது.