புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
Published on

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லமுத்துவின் மகன் செல்லக்கண்ணு(வயது 32), தேளூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராணி(40) ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, அவர்களது பெட்டிக்கடைகளில் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து, கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கயர்லாபாத் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அரியலூர் சடைய படையாச்சி தெருவைச் சேர்ந்த கோவிந்தசாமி(43) என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் கோவிந்தசாமியை கைது செய்து அவரிடம் இருந்த குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com