

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியான நிலையில், ஒரே நாளில் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 பேர் பலி
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 58 வயது பெண், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 16-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 17-ந் தேதி அவர் இறந்தார்.
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர், கொரோனா பாதிப்புடன் கடந்த 13-ந் தேதி ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் கடந்த 17-ந் தேதி இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை 161 ஆக உள்ளது.
தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
610 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 610 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 249 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரையில் 24 ஆயிரத்து 267 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 17 ஆயிரத்து 754 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 352 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 161 ஆக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.