பொது இடத்தில் மது குடித்த 2 பேர் கைது

திரு-பட்டினத்தில் பொது இடத்தில் மது குடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொது இடத்தில் மது குடித்த 2 பேர் கைது
Published on

கோட்டுச்சேரி

திரு-பட்டினம் போலீசார் மேலவாஞ்சூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பொது இடத்தில் மது குடித்த ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், நாகை மாவட்டம் நாகூர் பகுதியை சேர்ந்த லயா (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருநள்ளாறு புதிய பஸ்நிலையம் அருகே பொது இடத்தில் மது குடித்ததாக நாகை பொய்கை நல்லூர் பகுதியை சேர்ந்த சுபாஷ் சங்கர் (35) என்பவரை திருநள்ளாறு போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com