கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி

கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி
Published on

அரியலூர்:

2 பேர் பலி

அரியலூர் மாவட்டத்தில் 15 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேரும் நேற்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 11 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 21 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

298 பேருக்கு சிகிச்சை

தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 86 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 212 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 1,195 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 809 பேருக்கும் கொரானா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com