அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய 2 ரவுடிகள் கைது

புதுச்சேரியில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய 2 ரவுடிகள் கைது
Published on

புதுச்சேரி

ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் கடற்கரை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் கையில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கண்டாக்டர் தோட்டம் பிரியதர்சினி நகரை சேர்ந்த ரவுடி மணிகண்டன் (வயது 20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.

இதே போல் ஜீவானந்தபுரம் பகுதியில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய ரவுடி ரகு என்ற மாரியப்பன் (36) என்பவரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com