சாகாப்பூரில் அருவி தடாகத்தில் தவறி விழுந்த 2 வாலிபர்கள் பலி

தானே சாகாப்பூரில் அருகே உள்ள அருவி தடாகத்தில் தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலியாகினர்
சாகாப்பூரில் அருவி தடாகத்தில் தவறி விழுந்த 2 வாலிபர்கள் பலி
Published on

தானே, 

தானே மாவட்டம் சாகாப்பூர் தாலுகா கோர் கிராமத்தில் மவுலி காட் என்ற இடத்தில் அருவி உள்ளது. இந்த அருவியை சுற்றி பார்க்க ஆந்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் ரெட்டி (22), முர்பாட்டை சேர்ந்த தனஞ்செய் கெய்க்வாட் (30) ஆகியோர் இளம்பெண் ஒருவருடன் அங்கு வந்தனர். அப்போது ஒருவர் நிலைதடுமாறி அருவியின் தடாகத்தில் தவறி விழுந்தார். இதனை கண்ட மற்றொருவரும் அவரை காப்பாற்ற உள்ளே குதித்தார். ஆனால் 2 பேரும் தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் மூழ்கினர். உடன் வந்த இளம்பெண் சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடாகத்தில் விழுந்த 2 பேரை பிணமாக மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com