கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது

சமயநல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது
Published on

வாடிப்பட்டி,மே.

மதுரை சமயநல்லூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஊமச்சிக்குளம் அபிகார்டன் முன்பு சந்தேகப்படும் படியாக நின்ற 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனைசெய்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் கீழமாத்தூரைச் சேர்ந்த ராணி (40), செல்லூர் மேலத்தோப்பு செல்வம் (21), மேலக்குடியில்குடியை சேர்ந்த தமிழ்செல்வி (41) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com