தானேயில் சுவர் இடிந்து விழுந்து 3 குடிசை வீடுகள் சேதம்

தானே லோக்மானிய நகர் பகுதியில் தானேயில் சுவர் இடிந்து விழுந்து 3 குடிசை வீடுகள் சேதம்
தானேயில் சுவர் இடிந்து விழுந்து 3 குடிசை வீடுகள் சேதம்
Published on

தானே,

தானே லோக்மானிய நகர் பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் குடிசை வீடு ஒன்றின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகள் பக்கத்து வீட்டின் மீது விழுந்ததால் அருகில் இருந்த மேலும் 2 குடிசை வீடுகளும் சேதமடைந்தது. இது பற்றி தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். நல்லவேளையாக அந்த வீடுகளில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்பு படையினருடன் சேர்ந்து அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com