தூத்துக்குடியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த 3 பேர் கைது: பைக், செல்போன்கள் பறிமுதல்

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் தெற்கு பீச்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தூத்துக்குடியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த 3 பேர் கைது: பைக், செல்போன்கள் பறிமுதல்
Published on

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் தெற்கு பீச்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரோச் பூங்கா அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் அரிவாள் இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், பூபாலராயர்புரத்தை சேர்ந்த டார்ஜன் (வயது 26), தெற்கு ராஜா தெருவை சேர்ந்த சலேத்(24) மற்றும் எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தை சேர்ந்த அரவிந்த்(24) என்பதும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து, அந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com