நடந்து சென்ற பெண்கள் மீது கா மோதியதில் 3 பெண்கள் படுகாயம்

நடந்து சென்ற பெண்கள் மீது கா மோதியதில் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்
நடந்து சென்ற பெண்கள் மீது கா மோதியதில் 3 பெண்கள் படுகாயம்
Published on

அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி அருகே உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிவகாமி (வயது 45), நாகம்மாள் (56), வளர்மதி (56) ஆகிய 3 பேர் அரவக்குறிச்சி அருகே புங்கம்பாடி பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல்லில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று பெண்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சிவகாமி கோவை தனியார் மருத்துவமனையிலும், நாகம்மாள் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், வளர்மதி அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக, கார் டிரைவர் ஒட்டன்சத்திரம் புலியூர் நத்தத்தை சேர்ந்த ஜீவா மீது அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com