ஓட்டலில் திருடிய 3 வாலிபர்கள் கைது

புதுவையில் ஓட்டல் ஜன்னலை உடைத்து செல்போன்கள், கணினியை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டலில் திருடிய 3 வாலிபர்கள் கைது
Published on

புதுச்சேரி

புதுவையில் ஓட்டல் ஜன்னலை உடைத்து செல்போன்கள், கணினியை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பிரியாணி ஓட்டல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா விக்கிரமங்கலத்தை சேர்ந்தவர் முத்து. அவரது மகன் தங்கப்பாண்டி (வயது 27). இவர் காமராஜர் சாலையில் பிரியாணி ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் ஓட்டலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது ஓட்டலின் அலுமினிய ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஓட்டலில் இருந்த 2 செல்போன்கள், கணினி திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக கோரிமேடு போலீசில் தங்கப்பாண்டி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அங்குள்ள கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அவ்வப்போது ஓட்டலுக்கு வந்து மது அருந்தி செல்வது தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அங்குள்ள பழக்கடையில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த ஜெயராமன் (27), துணிக்கடைகளில் பணிபுரியும் பெங்களூருவை சேர்ந்த ஜெகன் (21), திருவண்ணாமலையை சேர்ந்த வசந்த் (22) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் செலவுக்கு பணம் இல்லாததால் ஓட்டலில் புகுந்து செல்போன்கள், கணினியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன், கணினி ஆகியவற்றை மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com