காஞ்சீபுரத்தில் 36 கண்காணிப்பு கேமராக்கள்

காஞ்சீபுரம் மாவட்டம் காஞ்சீ தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாச்சலம் நகரில் 650 குடும்பங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
காஞ்சீபுரத்தில் 36 கண்காணிப்பு கேமராக்கள்
Published on

இந்த நகரில் வசிப்போர் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் துறையின் அறிவுரைகளை யேற்று தங்களது பகுதிகளில் ரூ.8 லட்சம் மதிப்பில் 36 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில்:-

குற்றங்களை வெகுவாக தடுக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், பொதுமக்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தருவதற்கும் மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுகின்றன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் குற்றச்செயலில் ஈடுபட எவரும் துணியமாட்டார்கள், எனவே, இதுபோல மற்ற குடியிருப்பு பகுதிகளிலும் பொதுமக்கள் தானாக முன்வந்து தங்களது பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், போலீஸ் துறை அதிகாரிகள், வேதாச்சலம் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com