3-வது ஒருநாள் போட்டி: தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்

இந்திய அணி 10 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
3-வது ஒருநாள் போட்டி: தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்
Published on

ஆமதாபாத்,

இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த நிலையில், இந்திய அணி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களிலும், ஷிகர் தவன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவதாக களமிறங்கிய விராட் கோலி, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

தற்போது வரை இந்திய அணி 22 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயஸ் அய்யரும், ரிஷப் பண்ட்டும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com