சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 6 ஆண்டு கடுங்காவல்- சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

9 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 6 ஆண்டு கடுங்காவல்- சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
Published on

தானே, 

9 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

பாலியல் வன்கொடுமை

தானே மாவட்டம் பிவண்டி பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவள், கடந்த 2015-ம் ஆண்டு தோழிகளுடன் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த கணேஷ் என்பவர் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து மறைவிடத்திற்கு கடத்தி சென்றார். அங்கு சிறுமிக்கு குடிக்க பானம் ஒன்று கொடுத்தார். இதனை குடித்த சிறுமி மயங்கினாள்.

இதனை பயன்படுத்திய கணேஷ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று மிரட்டி இருந்தார். இதற்கிடையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

6 ஆண்டு கடுங்காவல்

அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி கணேசை கைது செய்தனர்.

அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை நிறைவில், அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து நேற்று கணேசுக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com