அனுதியின்றி பட்டாசு விற்ற 7 பேர் கைது

உவரியில் அனுதியின்றி பட்டாசு விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அனுதியின்றி பட்டாசு விற்ற 7 பேர் கைது
Published on

திசையன்விளை:

உவரி அந்தோணியார் ஆலயம் அருகில் உரிய அனுமதியின்றி சிலர் பட்டாசுகள் விற்பனை செய்வதாக உவரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் அங்கு சென்று, அனுமதியின்றி பட்டாசு விற்றதாக உவரியைச் சேர்ந்த ஜோயல் ராஜ் (வயது 55), சிவகாசி வெற்றிலை ஊரணியை சேர்ந்த கண்ணன் (54), அருண்குமார் (30), சந்தியாகு (43), ஜெபஸ்டியா ராஜ் (43), ஆபிரகாம் (48), மதன்குமார் (23) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com