திருடு போன 70 செல்போன்கள் பறிமுதல்

ஆன்லைனில் மோசடி செய்த பணம் ரூ.94 லட்சம் மீட்கப்பட்டது. திருடு போன 70 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீஸ் டி.ஐ.ஜி. வழங்கினார்.
திருடு போன 70 செல்போன்கள் பறிமுதல்
Published on

புதுச்சேரி

ஆன்லைனில் மோசடி செய்த பணம் ரூ.94 லட்சம் மீட்கப்பட்டது. திருடு போன 70 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீஸ் டி.ஐ.ஜி. வழங்கினார்.

70 செல்போன் பறிமுதல்

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மோசடி மற்றும் செல்போன் திருட்டு தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்தன. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு அந்த செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அந்த செல்போன்களை யார் பயன்படுத்தி வருகிறார்கள்? என கண்டுபிடித்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்படி புதுவையை சேர்ந்த 70 பேரின் செல்போன்களை போலீசார் மீட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும். இந்த செல்போன்களை காவல்துறை தலைமையகத்தில் அதன் உரிமையாளர்களிடம் போலீஸ் டி.ஐ.ஜி.பிரிஜேந்திரகுமார் யாதவ் வழங்கினார்.

மேலும் ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த 2 பேருக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

ரூ.94 லட்சம் மீட்பு

அதைத்தொடர்ந்து போலீஸ் டி.ஐ.ஜி. பிரிஜேந்திரகுமார் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடப்பாண்டில் மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 24 பணமோசடி தொடர்பான விவகாரத்தில் 13 வழக்குகளில் ரூ.94 லட்சம் மீட்கப் பட்டது. பெண்களுக்கு எதிரான 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைதாகி உள்ளனர். பெண் குழந்தைகளுக்கு எதிரான 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 70 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் துரிதமாக செயல்பட்ட அனைத்து சைபர் கிரைம் போலீசாரையும் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com