

கரூர்
கரூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று தற்போது அதிகரித்து 300 என்ற அளவை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி புதிதாக 313 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 5 பேர் குணமடைந்ததால் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 1,981 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.