சினிமா செய்திகள்

டப்பிங் யூனியனில் இருந்து நீக்கம்: பாடகி சின்மயி வழக்கு? + "||" + Dismissed from dubbing union: singer Chinmayi case?

டப்பிங் யூனியனில் இருந்து நீக்கம்: பாடகி சின்மயி வழக்கு?

டப்பிங் யூனியனில் இருந்து நீக்கம்: பாடகி சின்மயி வழக்கு?
டப்பிங் யூனியனில் இருந்து நீக்கம் காரணமாக, பாடகி சின்மயி வழக்கு தொடர்வது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய பாடகி சின்மயி, பாடுவது மட்டுமன்றி கதாநாயகிகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்து வந்தார். சமீபத்தில் திரைக்கு வந்த ‘96’ படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்து இருந்தார். டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தார்.


இந்த நிலையில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி திடீரென்று நீக்கப்பட்டார். இதுகுறித்து சின்மயி கூறும்போது, “டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியது தொடர்பாக எந்த விளக்கமும் சங்கத்தில் இருந்து வரவில்லை. சங்கத்துக்கு நான் 2 ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை என்றும் அதனால்தான் என்னை நீக்கி இருப்பதாகவும் காரணம் சொல்லி உள்ளனர். சந்தா கட்டாதது குறித்தும் முன் அறிவிப்புகள் எனக்கு வரவில்லை” என்றார்.

நீக்கம் காரணமாக புதிய படங்களுக்கு டப்பிங் பேச சின்மயியை இயக்குனர்கள் அழைக்கவில்லை. இதனால் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியதை எதிர்த்து சின்மயி கோர்ட்டில் வழக்கு தொடர்வது குறித்து வக்கீல்களுடன்ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் கோர்ட்டுக்கு சென்று சாதகமான தீர்ப்பை பெற்றதாகவும் அதன்படி சின்மயியும் கோர்ட்டுக்கு செல்ல தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ‘வாட்ஸ்-அப்’ பார்த்து கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம்
‘வாட்ஸ்-அப்‘ பார்த்து கொண்டே பஸ்சை ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக அதிகாரி இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்.
2. இலங்கை அணியில் கேப்டன் சன்டிமால் நீக்கம்
இலங்கை அணியில் கேப்டன் சன்டிமால் நீக்கப்பட்டார்.
3. சர்ச்சையில் சிக்கி நீக்கப்பட்ட பாண்ட்யா, ராகுலுக்கு பதிலாக இந்திய அணியில் விஜய் சங்கர், சுப்மான் கில் சேர்ப்பு
சர்ச்சையில் சிக்கி நீக்கப்பட்ட பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு பதிலாக இந்திய அணியில் விஜய் சங்கர், சுப்மான் கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
4. தடை நீக்கம்: சமயபுரத்தில் களைகட்டிய ஆட்டுச்சந்தை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்
தடை நீங்கியதை தொடர்ந்து சமயபுரத்தில் ஆட்டுச்சந்தை களை கட்டியது. ஆடுகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீரர் பிரித்வி ஷா நீக்கம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீரர் பிரித்வி ஷா நீக்கப்பட்டு உள்ளார்.