`ஹர்காரா' -தபால்காரர்களின் சவாலான வாழ்க்கையை பேசும் கதை

`ஹர்காரா' -தபால்காரர்களின் சவாலான வாழ்க்கையை பேசும் கதை
Published on

ராம் அருண் காஸ்ட்ரோ கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ள புதிய படம் `ஹர்காரா'. இவர் ஏற்கனவே `வி 1 மர்டர் கேஸ்' படத்தில் நாயகனாக நடித்து இருந்தார்.தற்போது `ஹர்காரா' படம் மூலம் டைரக்டராக அறிமுகமாகிறார். இதில் இன்னொரு நாயகனாக காளி வெங்கட் வருகிறார். கவுதமி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார்.ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

படம் குறித்து ராம் அருண் காஸ்ட்ரோ கூறும்போது, ``தபால் காரர்களின் சேவையை இன்றைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்தும் படமாக தயாராகிறது. டிஜிட்டல் வசதி இல்லாத காலத்தில் ஒரு மலை கிராமத்துக்கு செல்லும் தபால்காரர் எதிர்கொள்ளும் சவால்களையும் அங்கு வாழும் மக்களையும் பின்னணியாக கொண்டு படம் இருக்கும்.

மலை கிராமத்தில் ஒரு தபால்காரரை குலசாமியாக வழிபடு கிறார்கள். அவர் எப்படி குலசாமியாக மாறினார் என்பதை இந்தப் படம் விளக்குகிறது. நவீன காலத்து தபால்காரராக காளி வெங்கட் வருகிறார். தேனி அருகில் உள்ள மலைப்பகுதியில் படமாக்கப்பட்டு உள்ளது''என்றார். என்.ஏ.ராமு, சரவணன் பொன்ராஜ் தயாரிக்கின்றனர்.ஒளிப்பதிவு: பிலிப் ஆர்.சுந்தர், லோகேஷ் இளங் கோவன், இசை: ராம்சங்கர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com