'கோட்' படப்பிடிப்பிற்காக துபாய் புறப்பட்டார் நடிகர் விஜய்

'கோட்'படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
'கோட்' படப்பிடிப்பிற்காக துபாய் புறப்பட்டார் நடிகர் விஜய்
Published on

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றுள்ளார்.

முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றது. அப்போது நடிகர் விஜய்க்கு கேரள ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். அங்கு நடிகர் விஜய்யை காண்பதற்காக படப்பிடிப்பு தளத்திலும், செல்லும் இடங்களிலும் ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் அளித்த வரவேற்பு படத்திற்கு உணர்ச்சிகரமான விசயமாக அமைந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com