ரஷிய மொழியில் விக்ரம் படம்

விக்ரமின் ‘கோப்ரா‘ படமும் ரஷிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு அந்த நாட்டில் வெளியாக உள்ளது.
இந்திய படங்கள் ரஷிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. இந்திய படங்களுக்கு ரஷியாவில் அமோக வரவேற்பு கிடைத்து நல்ல வசூலும் பார்த்து வருகின்றன. சமீபத்தில் கார்த்தியின் 'கைதி' படம் ரஷிய மொழியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ரஷியாவில் உள்ள 121 நகரங்களில் சுமார் 297 திரையரங்குகளில் இந்த படம் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் விக்ரமின் 'கோப்ரா' படமும் ரஷிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு அந்த நாட்டில் வெளியாக உள்ளது. கோப்ரா படம் கடந்த ஆகஸ்டு மாதம் திரைக்கு வந்தது. இதில் விக்ரம் பல தோற்றங்களில் நடித்து இருந்தார். நாயகியாக கே.ஜி.எப் படம் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து இருந்தார். அஜய் ஞானமுத்து டைரக்டு செய்து இருந்தார்.
விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






