தமிழில் ஹனுமான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு


தமிழில் ஹனுமான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
x

imge courtecy:twitter@PrasanthVarma

தினத்தந்தி 26 March 2024 8:22 AM GMT (Updated: 26 March 2024 12:17 PM GMT)

ஹனுமான் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சென்னை,

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாரான படம் 'ஹனுமான்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்தார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்தனர். இந்த படத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்தார்.

இந்த படம் கடந்த ஆண்டு மே 12ம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் வெளியாகி ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படம் ஏற்கனவே தெலுங்கு, இந்தியில் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஆனால், இப்படம் ஓடிடியில் தமிழில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், ஹனுமான் திரைப்படம் ஓடிடியில் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 5 -ம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


Next Story