'டைட்டானிக்' படம் பாணியில்... 'டைட்டன்' விபத்து சினிமா படமாகிறதா?


டைட்டானிக் படம் பாணியில்... டைட்டன் விபத்து சினிமா படமாகிறதா?
x

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997-ல் வெளியான 'டைட்டானிக்' படம் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 111 வருடங்களுக்கு முன்பு டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் முழ்கி பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் வந்தது. வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த நிலையில் கடலுக்குள் 4 கிலோமீட்டர் ஆழத்தில் கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்க்க சமீபத்தில் கோடீஸ்வரர்கள் உள்பட 5 பேர் அடங்கிய குழுவினர் டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பலில் சென்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக டைட்டன் கப்பல் வெடித்து சிதறியதில் 5 பேருமே உயிர் இழந்தனர்.

இந்த நிலையில் டைட்டானிக் படத்தை போன்று டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்தையும் ஜேம்ஸ் கேமரூன் சினிமா படமாக எடுக்கப் போவதாக இணைய தளங்களில் தகவல் பரவியது. இதற்கு பதில் அளித்து ஜேம்ஸ் கேமரூன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 'டைட்டன் விபத்தை நான் படமாக்க போவதாக வெளியான தகவல் வதந்திதான்' என்று மறுத்துள்ளார். ஆனாலும் வேறு சில ஹாலிவுட் இயக்குனர்கள் டைட்டன் விபத்தை படமாக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.


Next Story