ரூ.3.5 கோடி மதிப்பில் புதிய கார் வாங்கிய நாக சைதன்யா - வீடியோ வைரல்

நடிகர் நாக சைதன்யா தற்போது வாங்கியுள்ள காரின் மதிப்பு ரூ.3.5 கோடி ஆகும்.
Naga Chaitanya buys Porsche worth ₹3.5 crore; check out pics of his expensive car collection
Published on

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா. இவர் 2009ம் ஆண்டு வெளியான ஜோஷ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து மனம், ஆட்டோநகர் சூர்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

சமீபத்தில் இவர் நடித்த படம் 'கஸ்டடி'. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கினார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்தது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார்.

நாக சைதன்யாவிடம் பெராரி முதல் பிஎம்டபிள்யூ வரையிலான ஈர்க்கக்கூடிய சொகுசு கார்களின் சேகரிப்பு உள்ளது. தற்போது அந்த சேகரிப்பில் புதிய கார் ஒன்றை சேர்த்துள்ளார். தற்போது நாக சைதன்யா போர்ஸ்சி 911 ஜிடி3 ஆர்எஸ் என்ற காரை வாங்கியுள்ளார்.

இந்த காரின் விலை ரூ. 3.5 கோடி ஆகும். இதனை நாக சைதன்யா ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

View this post on Instagram

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com