மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'எல் 2 எம்புரான்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘எல் 2 எம்புரான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
New poster release of 'L2 Empuran' on the occasion of Mohanlal's birthday
Published on

திருவனந்தபுரம்,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் இன்று தனது 64வது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். தற்போது இவர் 'எல் 2 எம்புரான்' படத்தில் நடித்து வருகிறார்.

மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த போஸ்டர் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நடிகர் மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு, 'எல் 2 எம்புரான்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com