'ஒரு தலை ராகம்' பட நடிகர் மரணம்


ஒரு தலை ராகம் பட நடிகர் மரணம்
x

தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் கைலாஷ் நாத் மரணம் அடைந்தார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி கைலாஷ் நாத் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 65.

கைலாஷ் நாத் ஆரம்பத்தில் கேரளாவில் மிமிக்ரி கலைஞராகவும், நாடக நடிகராகவும் இருந்து 1977-ல் வெளியான விடருன்னா மோட்டுகள் என்ற மலையாள படம் மூலம் திரைப்பட நடிகராக அறிமுகமானார்.

தமிழில் சீனியர் தலைமுறையினரால் மறக்க முடியாத காதல் படங்களில் ஒன்றாக இருக்கும் டி.ராஜேந்திரின் 'ஒரு தலைராகம்' படத்தில் கைலாஷ் நாத் நடித்து இருந்தார். இதில் வில்லன் ரவீந்திரின் அல்லக்கையான தம்பு என்ற கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் வந்தார். பாலைவனச்சோலை, வள்ளி உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் ஏதோ ஒரு ஸ்வப்னம், சர வர்ஷம், சேதுராம ஐயர் சிபிஐ, யுகபுருஷன் உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்து இருக்கிறார். 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கைலாஷ் நாத் மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

1 More update

Next Story