'இங்கு திறமை மட்டும் போதாது' - பரினிதி சோப்ரா

சினிமாவில் நான் இப்போது இருப்பதை விட இன்னும் உயர்ந்த நிலைக்கு சென்று இருக்க வேண்டும் என்று பரினிதி சோப்ரா கூறினார்.
image courtecy:instagram@parineetichopra
image courtecy:instagram@parineetichopra
Published on

மும்பை,

பிரபல இந்தி நடிகை பரினிதி சோப்ரா. இவர் 13 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,

"சினிமாவில் நான் இப்போது இருப்பதை விட இன்னும் உயர்ந்த நிலைக்கு சென்று இருக்க வேண்டும். அந்த அளவுக்கு சிறப்பாக நடிக்கும் திறமை எனக்கு இருக்கிறது. ஆனால் சில காரணங்களால் திறமை இருந்தாலும்கூட வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. இங்கு திறமை மட்டும் போதாது. பிரபலங்களுடன் நட்பு வைத்துக்கொள்வதும் முக்கியம்.

பார்ட்டிகளுக்கு அழைக்கும்போது என்னால் செல்ல முடியவில்லை. பார்ட்டிகளுக்கு சென்றால் பட வாய்ப்புகள் வரும். பார்ட்டிகளுக்கு போனால்தான் பட வாய்ப்புகள் வரும் என்று நான் சொல்ல வரவில்லை. பார்ட்டிகளுக்கு போவதாலும் பட வாய்ப்புகள் வருகின்றன.

திரைக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று இப்போது நான் தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் கேட்டு வருகிறேன். 29 வயதில் கொலை செய்யப்பட்ட பிரபல பஞ்சாபி பாடகர் அமர் சிங் வாழ்க்கை கதை படத்தில் 30 கிலோ எடை குறைத்து நடித்தேன். இந்த படத்தில் எனது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன'' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com