பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் பிரபாஸின் 'ஸ்பிரிட்'


பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் பிரபாஸின் ஸ்பிரிட்
x

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது என்று பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா கூறினார்.

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம், ஆதி புருஷ் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டில் பிரபாஸ் நடிப்பில் சலார் திரைப்படம் வெளியானது.

இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் பிரபாஸ், கல்கி 2898AD, ராஜாசாப் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்ததாக பிரபாஸ், அர்ஜுன் ரெட்டி, அனிமல் உள்ளிட்ட படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஸ்பிரிட் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பை ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தப் படம் தொடர்பான சில அப்டேட்டுகளை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா சமீபத்தில் நடந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, "என்னுடைய அடுத்த படம் பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட். இந்த படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது. தயாரிப்பாளர் இந்த பட்ஜெட் பணத்தை சாட்டிலைட் டிஜிட்டலின் மூலம் பெற்றுவிடுவார். அதன்படி இந்த படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 150 கோடியை வசூல் செய்யும். பிரபாஸ் இந்த படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 60 சதவீத ஸ்கிரிப்ட் பணிகள் முடிவடைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது" என்று அப்டேட் கொடுத்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story