வீடியோ கசிந்தது... ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் நடிக்கும் ஜீவா

ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் ஜீவா நடித்து வரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரலாகிறது.
வீடியோ கசிந்தது... ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் நடிக்கும் ஜீவா
Published on

மறைந்த ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வாழ்க்கை 'யாத்ரா' என்ற பெயரில் 2019-ல் திரைப்படமாக வெளிவந்தது. இதில் ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக ராஜசேகர ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை கதை 'யாத்ரா-2' என்ற பெயரில் சினிமா படமாக உருவாகும் என்று டைரக்டர் மஹி அறிவித்தார். இதில் ஜெகன் மோகன் ரெட்டியாக நடிக்க சூர்யா பெயர் அடிபட்டது. பின்னர் ஜீவாவிடம் பேசி வருவதாக கூறப்பட்டது. ஆனாலும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் ஜீவா நடித்து வரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் கசிந்து வைரலாகிறது.

ஜெகன்மோகன் ரெட்டி போலவே ஜீவா கும்பிடு போடுவது, மைக் பிடித்து பேசுவது போன்ற காட்சிகள் வீடியோவில் உள்ளன. இதன் மூலம் ஜெகன் மோகன் ரெட்டியாக ஜீவா நடிப்பது உறுதியாகி உள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டியின் இளம்வயது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஆந்திர முதல்-மந்திரியானது வரை நடந்த சம்பவங்கள் படத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com