விஜய் பிறந்தநாள்: கோட் படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது

'கோட்' படத்தின் 2வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
விஜய் பிறந்தநாள்: கோட் படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது
Published on

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது 50வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து 'கோட்' படத்தின் ஷார்ட்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இந்தநிலையில் , 'கோட்' படத்தின் 2வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com