திசையன்விளை புதிய தாலுகா உதயம் தாசில்தாராக தாஸ்பிரியன் நியமனம்

திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உதயம் ஆகியுள்ளது. தாசில்தாராக தாஸ்பிரியன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
திசையன்விளை புதிய தாலுகா உதயம் தாசில்தாராக தாஸ்பிரியன் நியமனம்
Published on

திசையன்விளை,

திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உதயம் ஆகியுள்ளது. தாசில்தாராக தாஸ்பிரியன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம், நாங்குநேரி தாலுகாக்களை பிரித்து, திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. திசையன்விளை புதிய தாலுகா வருகிற 25ந்தேதியில் இருந்து செயல்படும் என்றும், திசையன்விளை குறுவட்டத்துக்கு உட்பட்ட திசையன்விளை, அப்புவிளை, முதுமொத்தான்மொழி, உறுமன்குளம், கரைச்சுத்துபுதூர், குட்டம், குமாரபுரம், கரைச்சுத்துஉவரி, கோட்டைக்கருங்குளம் பகுதி1, கோட்டைக்கருங்குளம் பகுதி2, கஸ்தூரிரெங்கபுரம் பகுதி1, கஸ்தூரிரெங்கபுரம் பகுதி2, விஜயநாராயணம் குறுவட்டத்துக்கு உட்பட்ட சடையனேரி, விஜயநாராயணம் பகுதி1, விஜயநாராயணம் பகுதி2, விஜநாராயணம் பகுதி3, விஜயநாராயணம் பகுதி4, இட்டமொழி, ராமகிருஷ்ணாபுரம், கோவன்குளம், கண்ணநல்லூர் ஆகிய கிராமங்களை தனது ஆட்சி எல்லையாக கொண்டு செயல்படும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

திசையன்விளை தாலுகாவில் உள்ளடங்கும் திசையன்விளை, விஜயநாராயணம் ஆகிய குறுவட்டங்கள் மீது தற்போது ராதாபுரம், நாங்குநேரி தாசில்தார்களால் கையாளப்படும் அதிகாரங்கள் வருகிற 25ந்தேதியில் இருந்து திசையன்விளை தாசில்தாரால் கையாளப்படும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

புதிதாக உதயம் ஆகியுள்ள திசையன்விளை தாலுகா தாசில்தாராக, சங்கரன்கோவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தாஸ்பிரியன் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் அவருக்கு திசையன்விளை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிறப்பித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com