அம்மையநாயக்கனூரில் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா


அம்மையநாயக்கனூரில் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா
x
தினத்தந்தி 30 March 2017 10:45 PM GMT (Updated: 2017-03-30T23:36:36+05:30)

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது.

கொடைரோடு,

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த மண்டகப்படியில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழு தலைவர் தங்கப்பாண்டி, செயலாளர் காசிப்பாண்டி, பொருளாளர் ராமகிருணன் மற்றும் மண்டகப்படியினர் செய்து இருந்தனர்.


Next Story