குடவாசல், மன்னார்குடி பகுதியில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
குடவாசல், மன்னார்குடி பகுதியில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
குடவாசல்,
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே எரவாஞ்சேரியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட விவசாய பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் இளங்கோவன், ஒன்றிய துணை செயலாளர் கண்ணன், விவசாயிகள் பாதுகாப்பு இயக்க ஒன்றிய அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் வெண்மணி ராஜா வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கணேசன், தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் குழந்தைசாமி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் அய்யப்பன், ஊடகப்பிரிவு அமைப்பாளர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் கோவிசெங்கோவன் நன்றி கூறினார்.
மன்னார்குடி
அதேபோல் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் மன்னார்குடி அருகே சித்தேரி மரவக்காடு கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசகர் டாக்டர் பாரதிசெல்வன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கலைச்செல்வன், கோவலன், சதீஷ், ஹரிஹரன், ரமேஷ், தினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Related Tags :
Next Story