

நெல்லை, மார்ச்:
தமிழர் விடுதலை களம் நிறுவன தலைவர் ராஜ்குமார் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன், பாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் எனும் பொதுப் பெயரில் அழைத்திட அரசாணை வெளியிடுவதாக அறிவித்துள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு நாங்கள் ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ளோம். இந்த கூட்டணி வெற்றி பெற தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்வோம். அ.தி.மு.க. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களுக்கு தொகுதி ஒதுக்கினால் பாட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தமிழர் விடுதலைக் களம் 6-ம்ஆண்டு தொடக்க விழா மற்றும் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் முத்துக்குமார், மணிப்பாண்டியன், சுபாஷ் பாண்டியன் ஜெகன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநகர ஒருங்கிணைப்பாளர் ஜெய் பாபு வரவேற்றார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.