மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ + "||" + Rangasamy came in a two-wheeler and drove away

இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’

இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’
இரு சக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார். அப்போது அவர் கூறுகையில் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்தார்

சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி, ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். புதுவை திலாசுப்பேட்டை விநாயகர் கோவில் வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

அங்கு அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு சென்று அவர் ஓட்டுப் போட்டார். அதன்பின் தான் போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதியில் சில வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு நடைபெறுவதை பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் ரங்கசாமி கூறியதாவது:-

பிரகாசமான வெற்றி வாய்ப்பு

நான் போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு சென்று பாா்வையிட்டேன். ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் ஆா்வமுடன் வாக்களித்து வருகிறாா்கள். இந்த தோ்தலில் எங்கள் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் தட்டாஞ்சாவடி தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன்.

கடந்த ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இது மக்கள் அனைவருக்கும் தொியும். இதையெல்லாம் அவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே என்.ஆா்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவா் கூறினாா்.


தொடர்புடைய செய்திகள்

1. 10 ஆயிரம் அரசு காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
10 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
2. தொகுதிபக்கம் வராத பா.ஜ.க எம்.எல்.ஏவை தெருவில் தேங்கியிருக்கும் கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்!
உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏவை தொகுதி மக்கள் கட்டாயப்படுத்தி கழிவு நீரில் நடக்க வைத்ததாக கூறப்படுகிறது.
3. பாண்லே உற்பத்தித் திறனை 20 ஆயிரம் லிட்டராக உயர்த்த ஒப்பந்தம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்து
பாண்லே உற்பத்தித் திறனை 20 ஆயிரம் லிட்டராக உயர்த்த ஒப்பந்தம்: முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
4. புதுச்சேரி அமைச்சர்களுக்கு விரைவில் இலாகா ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் ரங்கசாமி
அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இலாகா ஒதுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
5. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ரங்கசாமி, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.