ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி


ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 28 April 2021 5:15 AM IST (Updated: 28 April 2021 5:15 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பஸ்கள் எதுவும் இயக்கப்படுவதில்லை. போக்குவரத்துக்கழக டிரைவர்களும், கண்டக்டர்களும் பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதால், அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும்          பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. ஈரோடு மண்டலத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட 2 ஆயிரத்து 452 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
1,050 ஊழியர்கள்
ஈரோடு, கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடந்தன. ஈரோடு மண்டல பொது மேலாளர் கணபதி முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த முகாம்களில் 112 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தற்போது வரை மொத்தம் 1,050 ஊழியர்கள் தடுப்பூசி போட்டு உள்ளனர். முகாமில் கிளை மேலாளர்கள் அர்ஜூனன், நல்லசாமி, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி (போக்குவரத்து) புவியரசு மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story