மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம் + "||" + Girl raped

சிறுமி பாலியல் பலாத்காரம்

சிறுமி பாலியல் பலாத்காரம்
கோத்தகிரியில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி

கோத்தகிரியில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

6 வயது சிறுமி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பெற்றோரை இழந்த 6 வயது சிறுமியை அவளது தாத்தா, பாட்டி மற்றும் மாமா ஆகியோர் தங்களது வீட்டில் வைத்து வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த உறவினர்கள் 3 பேரும், வேலைக்காக வெளியே சென்றுவிட்டனர். 

இதனால் வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தாள்.இதை அறிந்த பேட்டலாடா பகுதியை சேர்ந்த பழனிவேல்(வயது 50) என்ற தொழிலாளி, அந்த வீட்டுக்குள் புகுந்தார்.

போக்சோ சட்டம்

பின்னர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சல் போட்டார். உடனே பயந்துபோன பழனிவேல், அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.இதையடுத்து வேலை முடிந்து உறவினர்கள் வீட்டுக்கு வந்தனர்.

 அப்போது நடந்த சம்பவத்தை அவர்களிடம் சிறுமி கூறி கதறி அழுதாள். பின்னர் அவர்கள் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பழனிவேலை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சிறுமி பாலியல் பலாத்காரம்
மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கது செய்தனர்.
2. சிறுமியை மிரட்டி 6 மாதமாக பாலியல் பலாத்காரம்
கடலூரில் சிறுமியை மிரட்டி 6 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கணவர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப் பட்டனர்
4. ஓசூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது
ஓசூர் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்