மாவட்ட செய்திகள்

அந்தியூர், கொடுமுடி, தாளவாடி பகுதியில் கணவன்-மனைவி, 2 வயது குழந்தை உள்பட 71 பேருக்கு கொரோனா + "||" + corona virus

அந்தியூர், கொடுமுடி, தாளவாடி பகுதியில் கணவன்-மனைவி, 2 வயது குழந்தை உள்பட 71 பேருக்கு கொரோனா

அந்தியூர், கொடுமுடி, தாளவாடி பகுதியில் கணவன்-மனைவி, 2 வயது குழந்தை உள்பட 71 பேருக்கு கொரோனா
அந்தியூர், கொடுமுடி, தாளவாடி பகுதியில் கணவன்-மனைவி, 2வயது குழந்தை உள்பட 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
ஈரோடு
அந்தியூர், கொடுமுடி, தாளவாடி பகுதியில் கணவன்-மனைவி, 2வயது குழந்தை உள்பட 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
4 பேருக்கு கொரோனா
அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் பகுதியை சேர்ந்தவர் 32 வயதுடைய ஆண். இவர் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து 28 வயதுடைய அவருடைய மனைவிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவருக்கும் கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்திராநகர் பகுதியில் 52 வயதுடைய ஆண் மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதியில் 50 வயதுடைய பெண் ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட 4 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பரிசோதனை
இதைத்தொடர்ந்து எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் தலைமையில் செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சங்கராபாளையம், இந்திராநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் மற்றும் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கும் கொேரானா பரிசோதனை செய்யப்பட்டது.. மேலும் சுகாதாரப் பணியாளர்களை கொண்டு அப்பகுதி முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டும் வருகின்றன.
கொடுமுடி
கொடுமுடி பகுதியில் நேற்று ஏராளமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கம்மங்காட்டுகளத்தைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தைக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 57 வயது ஆணுக்கும், கொடுமுடி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்கும், கொடுமுடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 29 வயது பெண்ணுக்கும், சாலைப்புதூரைச் சேர்ந்த 27 வயது ஆணுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதேபோல் வருந்தியபாளையத்தை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கும், கொள்ளம்புது பாளையத்தை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண்ணுக்கும், 4 வயது சிறுவனுக்கும், 55 வயது பெண்ணுக்கும், 55 வயது ஆணுக்கும், கொடுமுடி புதிய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 29 வயது ஆணுக்கும் கொரோனா உறுதியானது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்கள். மேலும் அப்பகுதி முழுவதும் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மூலம் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.
தாளவாடி
தாளவாடி ஊராட்சியில் 17 ஆண், 13 பெண் உள்பட 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு்ள்ளனர். இதேபோல் பைனாபுரம் ஊராட்சியில் 8 ஆண், 4 பெண் உள்பட 12 பேரும், ஆசனூர் ஊராட்சியில் 2 பேரும், திகனாரை ஊராட்சியில் 3 ஆண், 2 பெண் உள்பட 5 பேரும், இக்களூர் ஊராட்சியில் 2 பேரும், மல்லன்குழி ஊராட்சியில் 3 பேரும், இக்களூர் பகுதியில் 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு்ள்ளது. தாளவாடி பகுதியில் ஒரே நாளில் 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு்ள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அனைவரையும் தனிமைப்படுத்தும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை சேகரிக்க மஞ்சள் நிற பிளாஸ்டிக் பை; மாநகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை சேகரிக்க மாநகராட்சி சார்பில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் பை வழங்கப்பட உள்ளது.
2. அம்மாபேட்டை பகுதியில் வேகமாக பரவி வரும் கொேரானா தொற்று; சமூக இடைவெளி- முககவசத்தை மறந்த மக்கள்
அம்மாபேட்டை பகுதியில் சமூக இடைவெளி-முககவசத்தை மக்கள் கடைப்பிடிக்க மறந்ததால் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது.
3. கொரோனா அதிகரிக்கும் என்று விடுத்த எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று நாங்கள் விடுத்த எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
4. மராட்டியத்தில் இன்று 48 ஆயிரம் பேருக்கு கொரோனா - 59 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 48 ஆயிரத்து 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிக்கப்பட்டோர் சி.டி. ஸ்கேன் எடுப்பதில் எந்த நன்மையும் இல்லை - எய்ம்ஸ் இயக்குனர்
லேசான அறிகுறிகளுடன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் சி.டி. ஸ்கேன் எடுப்பதில் நன்மையும் இல்லை என்று எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.