கர்நாடகத்தில் ஆட்சி தலைமை மாற்றமா? முதல்-மந்திரிஎடியூரப்பா பதில்
முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாளையொட்டி பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு அவர், நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரி பதவியை விட்டு என்னை நீக்குவது, அதாவது ஆட்சி தலைமை மாற்றம் தொடர்பாக சிலர் டெல்லி சென்று வந்துள்ளதாக கூறப்படுவது பற்றி நான் கருத்துக்கூற மாட்டேன். அவர்களுக்கு எங்கள் கட்சி தலைவர்கள் பதில் கூறி அனுப்பி வைத்துள்ளனர். கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுப்பது தான் எனது முதல் பணி. மற்ற விஷயங்கள் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.
கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். மேகதாது விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல அரசு தயாராக உள்ளது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டுவது குறித்து உங்களிடம் (பத்திரிகையாளர்கள்) விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story