வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசு ஆணை
வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசு ஆணை.
சென்னை,
தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் கிர்லோஷ் குமார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2011 முதல் 2016-ம் வரையுள்ள ஆண்டுகளில் வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி 2018-ம் ஆண்டு அக்டோபரில் அரசாணை வெளியிடப்பட்டது. வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை 2017, 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுவை வழங்கலாம் என்று அரசுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பகங்களில் 2017, 2018, 2019-ம் ஆண்டுகளில் (1-1-2017 முதல் 31-12-2019 வரை) வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் சிறப்பு புதுப்பித்தல் சலுகையை வழங்கி அரசு ஆணையிடுகிறது. இந்த சலுகையை பெற விரும்புவோர், இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவை புதுப்பித்துக்கொள்ளலாம். இந்த சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.
3 மாதங்களுக்கு பின்னர் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 1-1-2017 அன்றைய தேதிக்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story